Sunday, 5 October 2014
சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் குளு குளு சீசன்
ஊட்டி,:.ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டியில் நிலவும் குளு
குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தொடர்ந்து
மே மாத இறுதியில் பருவமழை துவங்கும். மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக
இருக்கும். இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
முற்றிலும் குறைந்து விடும். இந்நிலையில் இந்தாண்டு மே மாத இறுதியில்
துவங்க வேண்டிய பருவமழை துவங்கவில்லை. மாறாக ஜூன் இரண்டாவது வாரத்தில் தான்
மழை துவங்கியது. இருப்பினும் மழை தொடர்ச்சியாக பெய்யவில்லை. இதனால் ஊட்டி
வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment